ஊசி முனையில்
புன்னகைத்த நூல்
ஆடைகளின் உலகத்தைத்
தையலால் எழுப்பி
கானகத்தில் மொழியறியாப்
பகுத்தறிவாளரின் சிந்தனைக்குள்
ஆள் பாதி
ஆடை பாதியென
புரிந்துகொள்ளத் தலைப்பட்டு
நாள் முதல்
உதிரத்துடன் கலந்திருக்கும்
தாய்மொழியின் வாசனைதனை
மனிதனுக்குணர்த்திய மகுடமாய்
மாறிப் போய்
சைகைக்குக் கையசைச்து
எழுத்துக்களைக் கோர்த்து
பேச்செனும் நுழைவாயிலமைத்ததில்
மொழி துளிரிட
தாய்மொழிச் சாரலெனும்
புதுமழை பொழிந்தது!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: ஊசி
previous post