ஏக்கம் …
ஏரியில் தண்ணீர் நிறைந்து இருக்க
நண்டு செண்டுகள் நீச்சலடித்து மகிழ
சில்லென்ற காற்றும் தென்னைமர பாட்டும்
தண்ணீர் வழிய வழிய ஆட்டம்
இன்னும் இன்னுமென்று தீராத ஆசை
அசைப்போடும் நேரமெல்லாம் ஏரியின் குளுமை
ஏக்கம் கொள்ளும் மனம் ஏரிக்காகவும்
அதை அனுபவிக்காத என் பிள்ளைக்காகவும்
மித்ரா சுதீன்