சிறுகன்றுகளாம் மாணவர்கள் வேரூன்றி
விருட்சமாகும் விளைநிலமே பள்ளிக்கூடம்
வேற்றுமையில் ஒற்றுமை உணர்ந்து
தீண்டாமையை அறவே அகற்றி
பகிர்ந்து கொள்ளும் சால்பை
கதையாய்க் காட்சிகளாய்க் கற்பித்து
அறநெறியூடே மெய்ந்நெறி புகட்டி
அணையா விளக்காய் ஒளியும்
வழியும் காட்டும் பள்ளிக்கூடம்
சமத்துவம் கிளைபரப்பும் போதிமரமே!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: சிறுகன்றுகளாம்
previous post