தாய் மடிதவளும் மழலை தொல்லை இல்லையேதந்தை கரம்பற்றிய தனயனும் தொல்லை இல்லையே
தந்தை கரம்பற்றிய தனயனும் தொல்லை இல்லையே
ஆசான் அளிக்கும் அறிவுரைகளும் தொல்லை இல்லையே
பாசாங்கில்லா பாசத்திலே பண்ணுமெதுவும் தொல்லை இல்லையே
இல்லை என்றே ஆகிவிடில் எல்லாம் தொல்லையாகிடுமே
இல்லாதாரின் இயலாமை எல்லாருக்கும் தொல்லை என்றேயாகிடுதே
வறுமை வசதி இதுவன்றோ தொல்லையின் எல்லையாகிடுதே
தாய்மையுணர்வும் இல்லையென்றால் தவழும் பிள்ளையும் தொல்லையாகிடுமோ
குமரியின் கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா