பசுங்கரை மீதிலே
நீல்வண்ணன்
திரிபுங்க நிலையிலே நிறைச்சந்திரனழகிலே
நீள்விழிமூடி செவ்விதழ் குவித்தூத
புல்லினமும் புல்லரித்துக் கிறங்கிட
ஐம்பூதமும் தனைமறந்து பணிதுறக்க
குழலும் அக்கணம் மயங்கித்தவித்ததாம்
அவனுள்ளவளெனில்
மாதவமஞ்சரி இருவேறன்றெனில்
மூச்சுக்காற்றீன்றது மாயனா மாதவசங்கினியாவென!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: பசுங்கரை
previous post