பிம்பங்கள் பிழையாகி நினைவுப்பார்வையில் விழிக்கோளம்
எதிரில் ஊசிமணி
விற்பவளின் கைவித்தையாய்
வலிகளை சடசடவென
இதயநரம்பில் கோர்க்கிறேன்
“இப்பென்ன உசுரா போச்சு”
சரட்டென அரவணைக்கிறது எங்கோவொருவரின்
அலைபேசிப் பேச்சு
கற்சுமக்கும் தண்டவாளமும்
கண்களுக்கு ஓவியமாகிறது!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: பிம்பங்கள்
previous post