வண்ணமில்லா வெண்காகிதமாய் நின்றேன்..
அவனவளை தூரிகை வண்ணமாய்..
ரசனை மொழிகளில் தேன்கவிதையாய்..
காதல் வலிகளை வரிகளாய்..
கிறுக்கல்களில் தன்னுணர்வை ஓவியமாய்..
என்னை மின்னிட வைத்தான்..
அவள் கைகளில் பூவிதழ்
காகிதமாய் காதல் சொல்லி
அவனுணர்வை அவளுள் கடத்தி
காதல் பரவுது நெஞ்சில்…!
அனுஷாடேவிட்
வாரம் நாலு கவி: வண்ணமில்லா
previous post