வாழ்வானவன்
நான்கு கண்கள் உரசிக்கொள்ள
பிறந்தது காதல்தீ
தீயும். குளிருமென காட்டியது அவன்
காதல்
அவன் வருகையில் கற்று கொண்டேன் ஆயிரம்
தூங்காமல் கனவு காண கற்று
கொண்டேன்
மணிகணக்கில் காத்திருந்தாலும்
சலிக்கவில்லை நேரம் உறைத்தால்தானே
சாப்பாட்டின் ருசித்தெரியவில்லை பசித்து உண்டால்தானே ருசியறிய
எங்கும் போக பிடிக்கவில்லை என்னோடு அவனிருப்பதால்
எதையும் வாங்க பிடிப்பதில்லை கேட்கும்முன்னே அவன்வாங்கித்தருவதால்
படமோ பாட்டோ விளையாட்டோ எல்லாமும் அவனே
காதலும் அவனே மோதலும் அவனே
வாழ்வானவன்
மித்ரா சுதீன்.