வியூகம்தனையுடைக்க
வேகக்கணை விடுத்து
விவேகக்கணை
தொடுத்திருந்தால் விஜயதனையனும்
தந்தை வீரம்தனை
விஞ்சியிருப்பான்
மாரீசனின் மாயக்குரல்
கேட்டெழுந்த
மதிவேகம் தணித்திருந்தால் மைதிலியும்
சிறுமானிற்காக பெருமானைப் பிரிந்திறாள்
சினவேகத்தில் கூர்வார்த்தைகள் தெரித்துவிழாதிருந்தால்
கோபமும் கொள்ளத்தக்க பண்பாகியேயிருக்கும்
வேர் வேகமெடுக்கையில் மண்பிடிப்பதனை
வன்மரமாக்குமெனில் கட்டுண்டவேகங்கள் கற்கத்தக்கவையே !
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: வியூகம்தனை
previous post
