வேண்டாத காகிதம் கழிவாய் போனால்
அதனைப் பொறுக்கும் ஆளுக்குப் புதையல்!
பத்தாத சட்டை கழிவாய் போனால்
யாரோ ஒருவரின் உடலுக்குப் புத்தாடை!
நெல்லின் கழிவு உமியாய் போனால்
ஆடு மாடுகளின் அன்றாட உணவு!
உயிர்களின் கழிவு மண்ணின் உறமே!
வேண்டாத கழிவு உலகிலே இல்லை
ஒருவரின் கழிவு மற்றவர் வாழ்வு
புரிந்து வாழ்ந்தால் இல்லை தாழ்வு!!
பூமலர்