மனிதன் இயந்திரத்தை பறக்கச்செய்தான்-
விமானமாக.,
இரவில் தெரியும் இன்னொரு நட்சத்திரம்-
விமானம்.
காற்றுக்கடலில் மிதக்கும் ஓர்-
அற்புத கப்பல்-விமானம்.
இறகை அசைக்காமல் பறக்கும் ஓர்-
செயற்கைப்பறவை-விமானம்.
ஓரிடத்திருந்தோரிடத்திற்கு மனிதன் –
எடுத்தெறியும் அறிவியல் பந்து-விமானம்.
இதிகாச காலத்தில்…
கடவுளை எடுத்துச்சென்றதாம்-
கருடபகவான்.
கலியுகத்தில்…
சாமானியனை எடுத்துச்செல்லும்
கருடபகவான்-விமானம்
கங்கைமணி