இறைவன் இயற்றிய அழகிய மொழி
பூட்டிய மனக்கதவைத் திறக்கும் சாவி
உழைத்துக் களைத்தவனை உற்சாகப்படுத்தும் இசை
கரையேரத் துடிப்பவர்க்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு
திக்கற்றவர்க்கு வழிகாட்டும் பயனுள்ள திசைக்கருவி
திருடனையும் முரடனையும் திருத்திடும் நல்வாசகம்
பிள்ளைக்கறி சமைத்த பெற்றோர்களின் குலதெய்வம்
பராசக்தியின் பாலருந்திய ஞானக்குழந்தை “மழலை.”
ஊரப்பாக்கம் பார்த்திபன்🙏💕