உடல் வலி தாங்கி மன வலி கடந்து
ஈரைந்து மாதம் கருவில் சுமந்து
வலியின் உச்சம் கண்டது உடல்
உடலை கிழித்துக்கொண்டு வந்தது உயிர்
போதும் ஒரு குழந்தை, வேண்டாம்
மறு குழந்தை என்று மனம் உறுதியேற்க
அழுகை குரல் கேட்டு அமுதம் சுரந்தது
குழந்தையின் பசியாற்ற அனைத்தும் மறந்தது
நேரம் முழுவதும் சேயே சுருட்டிக்கொள்ள
குழந்தையின் மழலையில் வைராக்கியம் மறந்தாள்
– அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: உடல் வலி
previous post