எங்கள் இல்லறம் நல்லறமே காண
சாட்சியாய் வந்த புது வரவே!
தவழ்ந்தும், புரண்டும், விழுந்தும், எழுந்தும்
தத்தித்தத்தி நடைபயின்ற உன் சாகசங்கள்
காணக் கண் கோடி வேண்டுமே
‘ம்மா’ என்று தொடங்கி கண்ணே
நீ மிழற்றும் குதலை மொழிகள்
தேன் தெவிட்டும் இனிய சங்கீதமே!
நாபா.மீரா