ஒளி மின்னும் உன் கண்கள்
ஓராயிரம் கதை சொல்லும் அவை
உன் விரல் தொடும் பரிசம்
விவரிக்க முடியாத இனிமையான உணர்வுகள்
நீ பேசும் மொழிகள் மொழிகளின் உருவாக்கம்
நீ சொல்லும் கதைகள் புது உலகின் அனுபவம்
நீ தூங்கும் அழகை காண தூங்காமல் ரசிக்கும் என் கண்கள்
தேவர்கள் தேவதைகள் பூவுலகில் வாழ்கின்றன மழலைகளாக
கவிதாகார்த்தி
வாரம் நாலு கவி: ஒளி
previous post