கன்னங்குழிய புன்னகையை உதிர்க்கின்ற அழகு
கண்ணசைவில் கொள்ளையிட நானுருகும் மெழுகு
தேவதையை பூமியிலே தேடித் திரிவதேனோ?
தேயாத முழுமதியாம் மழலை அதுதானோ.
பட்டாம்பூச்சி பறந்தாற்போல் சுற்றிடும் போது
பட்டத்துயர் மறந்திடுமே பாலர்க்கு நிகரேது ?
பேசுகின்ற தெய்வமெது? மழலை சொல் தானே?
பூமியிலே குழந்தையின்றி வாழ்க்கையது வீணே.
“சோழா “புகழேந்தி