கொஞ்சி பேசும் பிஞ்சு இதழ்
நெஞ்சில் தங்கும் நெகிழ்வுப் பிணைப்பு
நிதமும் நீளும் நித்திய பாசம்
இதமாய்த் தவழும் இனிய சொற்கள்
கணமும் வாழ வைக்கும் கடமை
மனமும் மயங்கிக் கிடக்கும் மகிமை
பயிராய் வளரும் பண்பின் வழி
உயிர்க்க வைக்கும் உன்னத மொழி
– பாக்கியலட்சுமி