சிப்பிக் குமிழ் சிறு வாய்தனில்
சிதறிக் கிடக்கும் வெண் முத்துக்கள்
வெளுத்த அரியாய் களுக்கென்ற மூரலில்
செம்புலவனும் சிந்தை கொள்ளா கவியழகில்
குறு இதழோடு கரு விழியிணைந்து
தத்திப் பொழியும் சொல்லமுதைக் கேட்டு
குழலால் குவவை மயக்கும் மாதனும்
காத்தலை மறந்து கவி வடிப்பானோ!
புனிதா பார்த்திபன்