பத்துமாத கருவறையில் என் உயிர்சிறையில்
என்னில் பூத்த பூந்தளிரே பொன்மகளே
என்னையே மறந்தேன்
பொக்கைவாய்ச் சிரிப்பினிலே
சிறகின்றி நான் பறந்தேன்
என்தாயுமானவளே.
தளிர் நடையோ
புது நடனம்
அர்த்தம் இல்லா
வாய்மொழி இசையாக
மின்மினியே கண்மணியே அழகிய திருமகளே
என் வாழ்வின் வசந்தமானவளே வானவில்லே..
மித்ரா சுதீன்