மழலை என்றதுமே மனமெலாம் மகிழ்ந்தாடுமே
உழலும் உள்ளமும் உவகையில் கொண்டாடுமே
நிழலும் நிலையில்லா நிஜமில்லா நிலமதிலே
சுழலும் சூழலெல்லாம் சுகமென செய்திடவும்
விழலும் விளைய செய்யும் வகையெனவாய்
அழலும் தணிந்து மழை பொழிதலாய்
குழலது இசையினும் இனிய மொழிதலாய்
மழலையின் சிறுஅசைவுமே இறையென நிறையின்பமே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_