வாரம் நாலு கவி: அடர்ந்த

by admin 3
45 views

அடர்ந்த காடு அதுவே விலங்குகளின் வீடு
அழகு மிக்க விலங்குகள் உற்சாகமாக வளருமிடம்
புலி கர்ஜித்து பாய்ந்தோடும் கேட்பதில் இன்பம்
பறவை கூவும் பாட்டு  பரவசம் தரும்
மரங்கள் பல படர்ந்து வளர்ந்து நிழலுடன்
மழை நீர்க்கு வழி தரும் அன்றோ
கிளிகள் பாடும் மெல்லிசை கிளுகிளுப்பாக கேட்கலாம்
கொடிகள் அசைந்து காற்றில் ஆடி மேளமாகுமே
வனவிலங்கு வாழ மனிதனின் அரவணைப்பும் தேவை
நாம் காப்போம் வன விலங்குகளின் வாழ்க்கையை

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!