அதிகத்தின் அதிகமாய் அதிகமாவது கழிவாகுமோ
அதிமுக்கியம் இல்லாத அனைத்துமே கழிவாகுமே
அதிகமோ அதிமுக்கியமோ அது எதுவெனவே
அறிந்திட அறிந்தே
அதிகமதிகமாய் அதிமுக்கியமாக்கிடுவோமே
அனைத்துயிரிடமும் அன்பை அதிமுக்கியமாய் அதிகமாக்கியே
ஆத்திரங்கள் அதிகமாகுமுன் அன்பாலதை கழித்திடுவோம்
அறிவினை அதிமிகவாக்கியே ஆக்கமிகு அனைத்துமாக்கி
அழிவதை அளிப்பவற்றை அறிந்தே கழிவாக்கிடுவோம்
அவனியிலே அன்புறவை அதிகம் அதிகமாக்கியே
அகமகிழ்ந்திடவே அனைத்துறவிலும் பகைமைதனை கழிவாக்கிடுவோம்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: அதிகத்தின்
previous post