அனுபவத் தொகுப்பை முன்னுரையில் சுமக்கும்
வாழ்க்கைப் புத்தகத்தின்
இறுதி அத்தியாயம்!
முற்பாகத்தில்
கா(சே)மித்ததை
அசலும் வட்டியுமாய்
திரும்பிப் பெறும்
முதிர்வு காலம்!
பிணியும் புறக்கணிப்பும்
பக்கத்திற்கு பக்கம்
பவனிவர அசைபோட்டு
நினைவுகள் அழுத்த
நீயா நானாவென்ற
அடிவயிற்றுக் கனத்தோடு
முடிவறிந்த கதையின் முற்றுப்புள்ளிதேடும் பருவம்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: அனுபவத்
previous post