அனைத்தையும் அகப்படுத்தும் அஃறிணை ஆகாது
ஆண்டவனீன்ற ஆறறிவின்
ஆன்மா அருகிடாது
ஐம்புலனடக்கி அகத்துக்குள்
அகத்திற்கு அணையிட்டு
இப்பிறப்புப் பாதையில்
இவளே(னே) எந்துணையென
கொட்டும் மேளம்
எட்டுத்திசையும் கட்டியஞ்சொல்ல
கற்பினறம் காக்கும்
பெருமுயர் நிகழ்வு!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: அனைத்தையும்
previous post