அறிவுச் சிறகால்
அரலை கடந்து
ஆகாசப் பறவையாய்
அயல்தேசம் அடைந்து
கல்வியோ கனவோ
காலுயர்ந்து கரைதொட்டு
வேற்று தேசத்தின்
உற்ற சொந்தமாகினும்,
பற்றிச் செல்லப்படுகையிலும்
பாதம்பதிந்த பர்ணசாலையோடே
அளம் தாண்டி
சிங்களத்திலிறங்கிய சீதையாய்
அன்னை மண்ணின் அழியா அடையாளத்தை
இழக்கா இலக்கை
இதயத்தில் சுமந்து
படைத்த நிலத்தின்
பாரம்பரியம் மாறாது
பயணிக்கும் கன்னியவள்
கன்னித்தமிழுக்கும் ஒப்பன்றோ!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: அறிவுச்
previous post