வாரம் நாலு கவி: அழகாய்

by admin 3
16 views

அழகாய் அழகாய் அவனியதிலே
ஆண்டவனளித்த அத்தனையும் அதிசயமே
ஆராய்ந்தும் அறிவியலாலும் அறியவியலா
ஆதியும்
அந்தமும் அனைத்துமாகியே
அனைத்தையும் ஆட்டுவிக்கும் ஆற்றலாகியே
ஆறும் ஆழியும் அதனுயிர்களும்
அதனோடே அனைத்துயிர்களும் அசைவோடிருப்பதுவும்
ஆவியிருப்பதாலே அதனினுமேதுளதோ அதிசயமும்

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!