அழகுள்ள அனைத்திலும் உளதே கன்னித்தன்மை
அழிவில்லா ஆக்கமும் அளிப்பததனின் தன்மை
முதுமை இல்லா இளமையது கன்னிமையாம்
புதுமை எல்லாம் புதிதாக்கிடும் தன்மையதாம்
பெண்மை பேணுவதுவோ கன்னிமைத் தன்மை
ஆண்மையின் ஆளுமையிலும் உளதன்றோ கன்னித்தன்மை
எண்ணம் தூய்மையாய் தெளிந்திருத்தலே கன்னித்தன்மை
திண்ணமன்றோ களங்கமுடை உள்ளத்தவரிலில்லையே இத்தன்மை
திடமுடைதலும் தூய உளமுமாயிருத்தல் கன்னியன்றோ
மடமனிதர் கற்பித்த பாகுபாடு கன்னியிலில்லையன்றோ!!
*கன்னியாகுமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: அழகுள்ள
previous post