ஆயக்கலைகள் அறுபத்தினான்காம் சொல்லி வைத்தார் அன்று
வாழும் வரைக் கற்றிடுவோம் வித்தைகளை இங்கு!
வித்தை என்றால் வியப்பதுபோல் செய்வதுவாம் என்று
கற்றதையே வித்தையைப்போல் திறமையாகச் செய்திடுவோம் இன்று!
ஆடலிலும் பாடலிலும் புதுமை பல செய்வோம்
கணினியிலும் அறிவியலும் விரும்பி தினம் பயில்வோம்!
அண்டங்களும் ஆழிகளும் அறிந்து விந்தை செய்வோம்!
அழகியலும் சமையலையும் பயின்று இன்பம் காண்போம்!
எத்தனையோ கலைகளுண்டு பயின்று வித்தை செய்ய
மனம் சொல்லும் கலைகொண்டு செய்திடுவீர் தொண்டு!!
பூமலர்