வாரம் நாலு கவி: ஆறுக்கு

by admin 3
26 views

ஆறுக்கு திருநீறும் ஐம்பதுக்கு பூவாகும் சமத்துவமும்
பணப் பகடையில் வெட்டுப்பட்டு வீழும் அறமும்
போக்சோவுக்கும் முன்னூற்றி இரண்டுக்கும் திருத்த மசோதாயியற்றி 
தலைக்கு தலை விலைபேசும் சட்டத்தின் சத்தியப்பிரமாணமும்
பத்திரத்தால் பாசப்பசை கொள்ளும் பண்பான புத்திரர்களும்
பேரம் பேசும் அதிகாரிகளின் தொழில் பக்தியும்
கடைசிவரை கடைசியிலேயே
நின்று கண் சுருக்கிப்
பார்க்க வைக்கும் கருவறைக் கடவுளின் கருணையுமென
இதுக்கிணை எதுவென உயர்த்தி வைத்த உன்னதங்கள்
விலைக்கு மதிப்பாகி தன் மதிப்பிழந்து போனதுவோ!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!