இதயவாசல் ஊடே மன்மதன் எய்திட்ட கணைகள்
பேசிடும் மௌன மொழிதான் காதலோ.. முத்தங்கள்
ஊடகமாய் முத்திரை பதித்துச் செல்ல இவ்வையகம்
எங்கிலும் எதிரொலிக்கும் அன்புதான் காதலின் பொதுமொழியோ?
உறவுகள் மாறும் உணர்வுகள் மாறும் ஆயின்
புலன்கள் தீண்டும் நேசம் யாவிலும் பொதுவேயன்றோ?
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிடும் ஜீவகாருண்யமும் காதலே..
காதல் போகின் சாதல் ஒவ்வாக் கருத்தன்றோ?
இளமையில் துளிர்விட்ட கன்னிக் காதல் விருட்சமாய்
மூப்பிலும் துணைவர நடையிடும் தாம்பத்தியம் சுகமன்றோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: இதயவாசல்
previous post