இமயத்தில் கொடிகொண்ட சோழன்
கடலினை ஆட்சிசெய்ய நினைத்தான்!
கடல்வழி தெரிந்துகொள்ள வேண்டி
உன்வழியை பின்பற்றி நடந்தான்!
கடலிலே நீரோட்டம் பிடித்து
நீசெல்லும் நாடுகளைக் கொண்டான்!
முட்டையிட தாய்நாடு வந்திடுவாய்
குட்டிகளை சுயமுயற்சியில் தள்ளிடுவாய்!
தன்முனைப்பால் வென்றாயே உலகத்தை
உனைப்படித்து வென்றிடுவோம் அகிலத்தை!!
பூமலர்
