இமைகளின் மெல்லிய வருடலில்
இளைப்பாறும் நிசப்த இரவில்
துயில் வழி உள்நுழையும்
ரகசிய கனவுகள் வழியே
மனதை நெருங்குகிறாள் மாது..
விழிகளை மலர்த்தினேன்.., கண்ணீர்
உப்புக் கோடாய் வழிந்தது
தித்தித்த கனவுகள் பொய்யாகிப்போனதால்…!
✍️அனுஷா டேவிட்.
வாரம் நாலு கவி: இமைகளின்
previous post