இயற்கையின் கொடைகள் யாவும் உணர்ந்திட்ட பெருவாழ்வு
சுகமன்றோ… புது வரவாம் செயற்கை நுண்ணறிவு
சற்றே முரண்கள் ஏந்திய இயற்கையின்
மாயபிம்பமன்றோ?
நித்தமும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்
உடலால் மனத்தால்
நிறைந்ததொரு ஆரோக்கிய வாழ்வு
பஞ்சபூதங்களிலும் பிரளயம் ஏனோ …இயற்கை துறந்த செயற்கையின் வரவால்….
செயற்கைப் பூச்சுகள் காவு கொண்டதில் வெடித்திட்ட
இயற்கை அன்னையின் சீற்றமதில் தத்தளிக்கும் வையம்
மீட்பது எங்ஙனம்..? இனியொரு விதி செய்வோம்
போலி அரிதாரம் களைந்தே
ஆரோக்கியவாழ்வு வாழ்வோம்
நாபா.மீரா
வாரம் நாலு கவி: இயற்கையின்
previous post