இரவில் தோன்றும்
நிலவின் ஒளியிலும்
செயற்கையாக தோற்றுவிக்கும்
விறகு நெருப்பொளியிலும்
வாழ்ந்த மக்கள்
எண்ணெய் விளக்கு
மண்ணெண்ணெய் விளக்கு
என்று மாறியவர்களை
இரவிலும் பகலை
காணலாம் என்று
தோன்றியது மின்சாரம்
நம் தேவைகள் அதிகரிக்க
அதன் சேவைகளும் பெருகியது
தங்கம் போல் மின்சார விலையும்
ஏறிக்கொண்டே சென்றது
காலையில் கைதொடும் செல்பேசி முதல்
இரவில் பல் துலக்கும் ப்ரஷ் வரை
மின்சாரத்தின் அவசியம் அத்தியாவசியம்
தொட்டதும் ஷாக் அடிக்கும் மின்சக்தியை
ஆக்க சக்தியாக மாற்றும்
பல மின் சாதனங்கள்
வேகமாக சுழலும் காலச் சக்கரத்தில்
நம்மை வேகமாக பயணிக்க வைக்க
மின் சாதனங்கள் அவசியம்
அதற்கு மின்சாரமும் அவசியம்
— அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: இரவில்
previous post