இரு உள்ளங்கையில் கன்னங்கள் தாங்கி
நுதல் தன்னில் இதழ் பதித்து
என் காதலின் ஆழத்தை சொல்ல முயன்றிட
உன் கன்னச் சிவப்பு கண்டு
என் கண்ணில் காமதேவன் குடியேறிட
கன்னத்தோடு கன்னம் உரசி காதல் வசனம் பேசிட
அர்த்தமற்ற உளறல் பேச்சில் கன்னி அவள் சிரித்திட
புன்னகைத்த பெண்ணவளுக்கு கன்னக்குழிகள் தோன்றிட
போதையேறிய மன்னவனோ கன்னக்குழியில் விழுந்திட
விழுந்தவன் எழுந்தான் பிள்ளைகளின் பள்ளிக்கு
சம்பளம் கட்ட வேண்டும் என்று
— அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: இரு
previous post