இறைச்சிப் பொருளெல்லாம்
காலப்பெட்டகத்தில்
வேகமாய் மறைக்கப்பட்டு
பொருளிழக்க
உள்ளுறைப் பொருளெலாம் வேலையை
விநாடிக்குள் இழந்து
நிற்க
இலைமறைக்காயெல்லாம் நாகரீக வேகத்தில்
தெள்ளத் தெளிவாய்
இடம்பிடிக்க
பறவைகள் சிறகு
முளைக்குமுன்
பறக்க நினைப்பதால்
வாழ்க்கையிங்கு
அதிவேகத்தில் அதன்
இஷ்டத்துக்கு
நகர்ந்து கொண்டிருக்கிறது
வேகமாய்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: இறைச்சிப்
previous post