இலைகளே ஆடையாய் ஆதிமனிதன் மானங்காக்க
வகைவகையாய் உடைகள் நாகரிக வீதிதனில்
மறைப்பதே ஆகச்சிறந்த ஒழுக்கமாம் அன்று
குறைப்பதே கவர்ச்சியென்றொரு புரட்சிக்குரல் இன்று
சமூகமே வாருங்கள் ஒன்றாய்த் திரள்வோம்
நம் மெய்க்காப்பாளனாம் ஆடையவன் மானங்காக்க!
நாபா. மீரா
வாரம் நாலு கவி: இலைகளே
previous post