இளமையோ
முதுமையோ உந்தன்
ஆளுமையே !
மங்கையோ
மழலையோ
முத்தமிட்டு மகிழ்வது
உன்னிடமே !
திட்டுவதோ
பாராட்டுவதோ
உன்னை தழுவாமல்
நடப்பதில்லை !
அடியும்
அரவணைப்பும்
என்றும் உனக்கே !
வலது இடது மாய்
வசீகரத்தை காட்டி
வாலிபரை வசியம்
செய்வதும் நீயே !!!
*கவிஞர் வாசவி சாமிநாதன்
வாரம் நாலு கவி: இளமையோ
previous post