இழந்து பார் இன்பம் பெருவாய்!
பூச்சிகளின் இழப்பு பயிருக்கு செழுமை
அழுக்கின் இழப்பு உலகின் தூய்மை
சோம்பலின் இழப்பு உழைப்பின் அருமை
எடையின் இழப்பு உடலின் ஆரோக்கியம்
செடிகளின் இழப்பு உயிர்களின் உணவு
உயிர்களின் இழப்பு நுண்ணுயிர் வாழ்க்கை
கல்லின் இழப்பு சிலையின் பிறப்பு
தொழில்நுட்ப இழப்பு இயற்கையின் பாதுகாப்பு
இழந்து பார் இன்பம் பெருவாய்!!
பூமலர்