உச்சிக்கதிர்
உயிரைக் குடிக்க
உப்புக்கூர்மை
உடலைக் கிழிக்க
உவர்ப்புக்காற்று
கழலை மாலையிட
உப்பையுமிழும்
உடலுழைப்பு தாண்டி
உப்பிலுறையும்
உயிருழைப்பு நல்குமிவர்களின்
உப்பளத்திலூறிய உன்னதப்பாதங்களும்
உருமாறிக்கிடக்கிறது
உப்பிட்டோரை
நிறைத்து
நினைந்து
உருவாக்கியோரை
மறந்த மனிதம்போல்
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: உச்சிக்கதிர்
previous post