உடலசைவில் நளினமாய்
நடனமாடி
சுமையையும் சுகமாய்ச்
சுமக்க
சுமக்கப்படுபவதை உப்பு மூட்டையாக்கி
புலனடக்கத்தில் உவமைக்கு
உதாரணமானாய்
வேகமதில் நிதானத்தின்
சிறப்பாய்
கதைகளின் பக்கங்களில் வரலாறானாய்
தண்ணீர் வாசத்தினுள்
கருக்கொண்டு
தவ வாழ்க்கையை
மூழ்கியபடிக்காத்து
தலைமுறைகளைத் தலைதூக்கி
நிறுத்தப்பாடுபட
உனைப்போலிங்கு
யாரால் முடியும்?
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: உடலசைவில்
previous post