உடலும் மனமும் சமூக வாழ்வும் பேணுதலே
சிறந்த மனிதனின் ஆரோக்கிய மேம்பாட்டின் தத்துவமே!
உடற்பயிற்சி சுற்றுச் சூழல் சுகாதாரச் சுத்தமும்
பூச்சிமருந்தில்லா அறுசுவை உணவுமே உடல்நலம் பேணுமே!
நல்ல தூக்கம் அறிவுசார் படிப்பு அத்துடன்
தியானம் பொறுமை பகுத்தறிவு மனநலம் காக்குமே!
பெற்றோர் உடன்பிறத்தோர் உற்றாரும் தோழரும் பேண
அன்பு ஒழுக்கம் மரியாதை சமூகம் கூட்டுமே!
செயலும் மனமும் வாக்கும் பார்வையும் சுத்தமென்றால்
சமூக நல்லிணக்கம் கிட்டி ஆரோக்கியம் நிலைக்குமே!!
Poomalar