உன்னை மதிக்காதவர்களை
அலட்சியம் செய் !
உன் மதிப்பறியாதவர்களை
அலட்சியம் செய் !
ஏளனப்பார்வை வீசுவோரை
அலட்சியம் செய் !
தரக்குறைவாக விமர்சிப்போரை
அலட்சியம் செய் !
குற்றம் மட்டுமே காண்போரை
அலட்சியம் செய் !
அன்பில் வேண்டாமே
என்றும் அலட்சியம் !
உறவில் வேண்டாமே
ஓர்நாளும் அலட்சியம் !
கடமையில் வேண்டாமே
எந்நாளும் அலட்சியம் !
பி. தமிழ் முகில்
வாரம் நாலு கவி: உன்னை
previous post