உயிர்வளி கொண்டு சுழலும் உலகம் ஒன்றே!
நிலத்தை இறுக்கிப் பிடிக்கும் மரங்கள் நன்றே!
உயிர்கள் பிறக்க நீரைத் தேக்கிய கடலே!
அன்னை தந்தை சேர்ந்து பெற்ற உடலே!
உற்றார், உடன் பிறந்த, பிறக்காத நட்பே!
ஒருவனுக்கு ஒருத்தியாய் உள்ளம் பகிரும் கற்பே!
உணவும் காற்றும் இருப்பிடம் தந்த இயற்கை!
பிணியும் நோயும் இல்லாமல் இருக்க அறிக்கை!
வாழும் சூழல் எல்லாமே கிடைத்த உதவி!
இவற்றை காதலித்தால் கிடைக்கும் அமர பதவி!!
பூமலர்
