உறக்கத்தில் கனவுகள் தொல்லை சில பகல்கனவாய்…
நனவும், நிதர்சனமும் தீண்டும் விழிப்பிலோ தொல்லைகள்
ரூபம் வேறாய்… ஏட்டிக்குப் போட்டியாய் உலாவரும்
பருவச்சீற்றங்களால் தொல்லை பதின்மர்
போடும் ஆட்டத்தினாலும்தான்
அன்றாடங்கள் அச்சுறுத்தும் வாழ்வாதாரமோ
நாளுக்குநாள் பெருந்தொல்லையே
வயோதிகம் அன்புக்கு ஏங்கித் தவிக்கும் நிலையிருக்க
அன்பே தொல்லையாய் அக்கரைப் பச்சை
வாழ்க்கை…
ஆக வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான்
பார்க்கணுமோ?
நாபா.மீரா