உறிக்கப்பட்டாலும் பிறரைக் கண்கலங்க வைக்கும்
காவியம்
குழம்பு வகையறாக்களின் சாம்ராஜ்யத்தில் தனித்து
நுழைந்து
இல்லத்தரசிகளின் இல்ல இருப்பில் நீயில்லையா?
புலம்பலுக்கிடமுண்டு
தோலுரித்துச் செய்வது தொல்லையென நினைத்தாலும்
மகத்துவமானது
அறிந்ததால்தான் அலுக்காமல் சேர்க்கப்பட்டு ஆயுளின்
நீட்சியானாய்
காய்ந்து போன பின்தான் உள்ளியினுருவம் அழகு
நிறமதன் வகைகளிலும் வெங்காய நிறத்திற்கென
தனியிடமுண்டு
தோலுக்குத் தொல்லை தந்தாலும் தோழமையுடன் தோள்கொடுக்கின்றாய்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: உறிக்கப்பட்டாலும்
previous post