உள்ளத்தூதை ஏந்திடும் வெள்ளைத்தூதனவன்
வெகுளியாய்
சுமந்து சென்றான்
ஈரிதயக்கூட்டினுள்
இசைமீட்டும் சந்தங்களையும்
கண்ணீரில் வரைந்த காவியங்களையும்
பதிலிற்கு பதிலாய் முத்தங்களையும்
பதற்றத்தில் சிதறிய மனமுத்துக்களையும்
பதுங்கிப் பதுங்கி கரைசேர்த்தவன்
பத்திரமாய்
பழுப்பேறிக் கிடக்கிறான்
சிலரின் கடையிதழ் ஆனந்தமாய்
சிலரின் கடைவிழிக் கண்ணீராய்!
புனிதா பார்த்திபன்