உள்ளாழமற்ற உரிமைக்
கோபம் தான்
இதழ் இணைப்பிலோ
மெல் அணைப்பிலோ
அணைந்து போகக்காத்திருக்கும் பொய்ப் பிணக்குதான்
இருமுத்துக் குழியில்
இடைவிழுந்தது இணைப்பறுப்பதுபோல்
உபதேசமென ஊறுடுவிய உதவிகளின் உபயத்தால்
கூடலில் முடிய
வேண்டிய ஊடல்
ஊதிப் பெரிதாகி
கூறுபோட்டு வேறானது
புகுந்ததின் வினையென்பது
புத்தியின் பிழையன்றோ!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: உள்ளாழமற்ற
previous post