ஏக்கத்தின் தேக்கம்..
என் மனம் எனும் அலமாரியில்
முன்னோர்களின் நினைவுகள் எல்லாம் முதலடுக்கில்
இரண்டாமடுக்கில் காதலுடன் கடமைகள் நிறைந்திருக்க
மூன்றாமடுக்கில் எதிர்கால
கனவுகள் கலைந்துகிடக்க
நான்காமடுக்கில் நான்
என்ற நினைவு
தேங்கி கிடக்கு ஏங்கமாய் வரட்டுமாயென்று!!??
மித்ரா சுதீன்