ஏர்த்தொழிலுக்காய் ஏற்பட்டதுவே ஏரியெனும் எழில்நீரகம்
சீர்த்திருத்தம் செய்யாததால் சீரழிந்தே சிதைந்ததுவே!
சீமையென சிங்காரமாக்கவே சிந்தையும் சிதிலமாகியே
சுமையோ பூமிக்கு நீரெனவே நீக்கியே
அமைத்தோமே அதன்மேல் அதிகமாய் அஸ்திவாரங்கள்
அத்தனையும் அழித்தே ஆக்கிரமிப்பு ஆக்கியதால்
எத்திக்கிலும் ஏரியுமில்லை ஏர்த்தொழிலும் இல்லை
என்றாகிடும் ஏளன நிலைக்கு ஆளாகினோமே..!
*குமரியின்கவி*
*_சந்திரனின் சினேகிதி_*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: ஏர்த்தொழிலுக்காய்
previous post